சூடான செய்திகள் 1

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இழப்பீடு

(UTV|COLOMBO)-கிளிநொச்சியில் வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

image d904a18954

வெள்ள பாதிப்புகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சிக்கு நேற்று விஜயத்தை மேற்கொண்டார். இதன் போது மாவட்ட செயலகத்தில் வடக்கு அதிகாரிகளுடன விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.இந்த கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

image 3cbd78d490
வெள்ள அனர்த்தத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை தொடர்ந்து எதிர்வரும் மூன்று தினங்களுக்கு தங்கவைத்து உணவு வழங்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

image 7158448423

Related posts

மாகல்கந்த சுதந்தர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களுக்கும் பிணை

அரசாங்க பங்குடமை மாநாட்டில் ஜனாதிபதி

அலோசியஸ் மற்றும் கசுன் – நவம்பர் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில்