சூடான செய்திகள் 1

24 வீடுகள் கொண்ட லயன் குடியிருப்பில் தீ விபத்து

(UTV|COLOMBO)-ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா போடைஸ் 30 ஏக்கர் தோட்ட பகுதியில் உள்ள 4 ஆம் இலக்க குடியிருப்பில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்து காரணமாக 24 குடியிருப்புகள் எரிந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (29) காலை 6.15 மணி அளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இந்த லயன் குடியிருப்பில் இருந்த 24 வீடுகள் முற்றாக எரிந்துள்ளதுடன் குடியிருப்பில் இருந்த உடமைகள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொதுமக்கள், ஹட்டன் பொலிஸார், நோர்வூட் பிரதேச சபை மற்றும் தோட்ட நிர்வாகத்தினர் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதோடு, நுவரெலியா மாவட்ட தீயணைக்கும் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 24 குடும்பங்களை சேர்ந்த 150 பேர் போடைஸ் தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கபட்டுள்ளதாகவும் அவர்களுக்கான உலர் உணவு பொருட்களை வழங்க தோட்ட நிர்வாகம் மற்றும் அம்பகமுவ பிரதேச காரியாலயம் முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் தீயினால் சேதமடைந்த பொருட்களின் பெறுமதி மதிப்பிடபடவில்லை எனவும் தீயிற்கான காரணம் கண்டறியப் படவில்லை எனவும் ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

 

 

 

Related posts

விஜயகலாவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி மாதம் வரை ஒத்திவைப்பு

தெமட்டகொட குண்டுவெடிப்பில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் பாதிய பண்டார ரத்னாயக்கவின் குடும்பத்திற்கு ஜனாதிபதியால் நிதியுதவி வழங்கப்பட்டது

8ஆவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு