சூடான செய்திகள் 1

பஸ் கட்டணத்தை குறைக்காத பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

(UTV|COLOMBO)-பழைய விலைக்கே பஸ் பயணக்கட்டணங்களை அறவிடும் பஸ்கள் தொடர்பில் இதுவரை 23 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மேல் மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த 26ம் திகதி நள்ளிரவு தொடக்கம் புதிய பஸ் பயணக்கட்டணங்கள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , தொடர்ந்தும் பழைய விலைக்கே கட்டணங்களை அறவிடும் பேரூந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் துசித குலரத்த தெரிவித்துள்ளார்.

பழைய விலைக்கு பஸ் கட்டணங்களை அறவிடும் பஸ்கள் தொடர்பில் 0112 860 860 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்யமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

Related posts

உலகின் மிகபெரிய கிரிக்கெட் மைதானம் : நரேந்திர மோடியின் வாக்கு

காணாமல்போன மீனவர்கள் கண்டுபிடிப்பு

நான் விலகுவதே அனைவரதும் விருப்பம்?