சூடான செய்திகள் 1

பொதுநலவாய அமைப்பு இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு

(UTV|COLOMBO)-இலங்கையில் நிலவிய அரசியல் நெருக்கடி நிலைமையை அமைதியான முறையில் தீர்க்க முடிந்தமை குறித்து பொதுநலவாய அமைப்பின் பொதுச்செயலாளர் பெற்றீசியா ஸ்கொட்லாண்ட் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

அதேபோல் , இந்நாட்டு அரசியல் நல்லிணக்கம் , அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை எதிர்ப்பார்த்து தொடர்ந்தும் ஆதரவளிக்க தயாராக உள்ளதாக அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளார்.

மேலும் , பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்து தனது வாழ்த்துக்களையும் பொதுநலவாய அமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதில் , இந்நாட்டு ஜனநாயகத்தின் ஸ்திரத்தன்மை குறித்த தனது மகிழ்ச்சியை வௌிப்படுத்தியுள்ள அவர் , இலங்கை மற்றும் பொதுநலவாய  செயலகத்திற்கு இடையிலான உறவுகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

 

 

 

 

 

Related posts

இடியுடன் கூடிய மழை

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை

நாட்டிலுள்ள பல பிரதேசங்களுக்கு இன்று மழை