சூடான செய்திகள் 1

“டிக்கி அக்கா” கைது

(UTV|COLOMBO)-51 வயதான “டிக்கி அக்கா” வை கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்த கொழும்பு, குற்றப்புலனாய்வு பிரிவினர், அந்த அக்கா, “களு அக்கா”வுடன் தொடர்புடையவர் என்றும், மாளிகாகந்த நீதிமன்றத்தில், டிக்கி அக்காவை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

கிராண்ட்பாஸ் அனுப​ஹே வத்சந்திக்கு அருகில்​ வைத்து கைதுசெய்யப்பட்ட அந்த பெண்ணிடம், 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்றும் கொழும்பு குற்றப்புலாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேகநபரான அந்த பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட 52 கிராம் 295 மில்லிகிராம் நிறையைக் கொண்ட அந்த ஹெரோய்ன்,  தொட்டலங்க களு அக்காவினுடையது என்றும், களு அக்கா, போதைப்பொருளை வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், சிறைச்சாலையில் உள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

 

 

 

Related posts

சில பிரதேசங்களுக்கு 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

ஆணொருவருடன் 6 பெண்கள் இணைந்து செய்த காரியம்…

அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்