சூடான செய்திகள் 1

போதைப்பொருளுடன் இருவர் கைது

(UTV|COLOMBO)-ஐஸ் போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் வட்டுக்கோட்டை – சித்தன்கேணி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் 86 கிராம் 410 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் வட்டுக்கோட்டை – மாதகல் பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் காரில் பயணித்த மேலும் ஒரு நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று மாலை கிரேண்பாஸ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளர்.

அவரிடமிந்து சுமார் 10 கிராம் அளவான ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மட்டக்குளி பகுதியை சேர்ந்த 34 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

கடும் குளிரான காலநிலை…

மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டனர்

தொடர்ந்தும் 6 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் நீடிப்பு