சூடான செய்திகள் 1

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம்?

(UTV|COLOMBO)-2018ம் ஆண்டு கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையானது குறிப்பிட்ட தினத்தில் இடம்பெற்றாலும், பெறுபேறுகளை இன்று(27) நள்ளிரவுக்கு பின்னர் வெளியிட முடியாதுள்ளதாகவும், பெறுபேறுகளை வெளியிட ஓரிரு தினங்கள் செல்லும் எனவும் பரீட்சைகள் நாயகம் சனத் பூஜித ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 28ம் திகதியும், சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதியும், புலமைப் பரிசில் பரீட்சைகள் ஒக்டோபர் 05ம் திகதியும் வெளியிட 2017ம் ஆண்டு கல்வியமைச்சு, பரீட்சைத் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியிருந்தது.

எனினும், இம்முறை குறிப்பிட்ட திகதியில் உயர் தரப் பெறுபேறுகளை வெளியிட முடியாதுள்ளதாக பரீட்சைகள் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

மழையுடனான வானிலை மேலும் அதிகரிப்பு

இரவு சந்தை காரணமாக வாகன நெரிசல்…

மே தினக் கூட்டங்களை இரத்து செய்ய சில அரசியல் கட்சிகள் தீர்மானம்