சூடான செய்திகள் 1

பாராளுமன்ற குழப்ப நிலை-இன்று(27) குழு மீண்டும் கூடுகிறது

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழுப்பகரமான நிலைமைகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழு, இன்று (27) மீண்டும் கூடவிருக்கின்றது.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான மேற்படி குழுவை, சபாநாயகர் கருஜயசூரிய நியமித்திருந்தார்.

இதேவேளை, ஊடக நிறுவனங்களின் பிரதானிகளிடமே, இந்தக் குழு இன்றையதினம் விசாரணைகளை மேற்கொள்ளும்.

ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஒளிநாடா காட்சிகள் தொடர்பில் ஆராய்வதற்காக, பாராளுமன்ற பணியாட்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Related posts

கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

பாராளுமன்றம் கலைப்பு தொடர்பாக விமல் கருத்து

நாம்200: மனோவுக்கு அழைப்பில்லை- தொடர்புகொண்ட ரணில்