(UTV|PARIS)-பாரிசில் தீக்காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தீயணைப்பு படையினர் கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கினர்.
பிரான்சின் பாரிஸ் நகரில் Trousseau மருத்துவமனையில், தீக்காயங்களுக்குள்ளான சிறுவர், சிறுமிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் இரண்டு மாத குழந்தையில் இருந்து 16 வயது வரையிலான 16 குழந்தைகள் சிகிச்சை பெறுகின்றனர். மருத்து கண்காணிப்பின் கீழ் உள்ள இவர்களுக்கு தீயணைப்பு படையினர் நேற்றைய தினம் கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கினர்.
அவற்றில் சொக்கொலேட்கள், பொம்மைகள், விளையாட்டு பொருட்கள் அடங்கியிருந்தன. பரிசுகளைக் கண்டு ஆரவாரம் செய்த குழந்தைகள், அவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர். இச்சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.