சூடான செய்திகள் 1

நிவாரணங்களை வழங்குவதற்கு ஆளுநர் அலுவலகம் விசேட வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் மற்றும் உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக வடக்கு மற்றும் தெற்கில் விசேட தொலைபேசி இலக்கங்கள் இரண்டு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

தற்போது வெள்ளம் வழிந்துள்ள நிலையில் வட மாகாண மக்கள் மோசமான நிலைக்கு முகங்கொடுத்திருப்பதாக வட மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

விசேடமாக சுகாதார பிரச்சினைகள் அதில் முக்கியத்துவம் வகிக்கிறது. குடிநீர் கிணறுகளை சுத்தம் செய்தல், பாதிக்கப்பட்ட வீடுகளை மீளமைத்தல் போன்ற நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. இதற்காக இராணுவத்தினரின் பாரிய சேவைகள் தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக வட மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தெற்கில் உள்ளவர்கள் கொழும்பு பத்தரமுல்லை ஜயந்திபுரவில் அமைந்துள்ள வட மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது 0112 883 371 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு தொடர்பு கொண்டோ நிவாரண உதவிகளை வழங்க முடியும். வட மாகாண ஆளுநர் அலுவலகத்தின் 0211 219 376 என்ற இலக்கத்திற்கு அழைத்து உதவிகளை வழங்க முடியும்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

மே மாதம் 21 ஆம் திகதி ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் ஆரம்பம்…

கொலை செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை பொலிஸ் உத்தியோகத்தர் சடலம் தோண்டி எடுப்பு

சேனா படைப் புழுவை கட்டுப்படுத்த போருக்கு சமமான அர்ப்பணிப்பை வழங்குமாறு பணிப்பு