கிசு கிசு

வெள்ளை மாளிகையில் ஏழையைப் போல் தனிமையில் இருக்கிறேன்

(UTV|AMERICA)-அமெரிக்காவில் ஷட் டவுன் மூன்றாவது நாளாக தொடர்வதால், வெள்ளை மாளிகையில் தனியாக இருப்பதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் அகதிகள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கு வழி செய்யும் வகையிலும் சுவர் எழுப்ப ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டார்.

இதற்காக சுமார் 500 கோடி டொலர் நிதி ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையிலும் டிரம்பின் இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அத்துடன் இரு அவைகளிலும் இருந்த ஜனநாயகக் கட்சியினர் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டனர்.

இதன் காரணமாக அமெரிக்காவில் ஷட் டவுன் தொடங்கியது. இது 3வது நாளாக தொடர்கிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர ஜனாதிபதி டிரம்ப் முயன்று வருகிறார். இதற்காக ஜனநாயகக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் ஆவலுடன் இருந்த நிலையில், கட்சி அமைச்சர்கள் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட ட்வீட்டில், ‘நான் அமெரிக்க ஷட் டவுனை முடிவுக்குக் கொண்டுவர கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், ஜனநாயக கட்சி அமைச்சர்கள் அவர்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றனர். நான் வெள்ளை மாளிகையில் ஏழையைப் போல் தனியாக இருக்கிறேன்.

ஜனநாயகக் கட்சியினர் என்னுடன் வந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என காத்திருக்கிறேன். அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்புக்காக சுவர் அவசியம். ஆனால், அதிகமாக செலவாகும் என்று ஜனநாயகக் கட்சியினர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

நான் ஓவல் அலுவலகத்தில் அமர்ந்து நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பணியாற்றி வருகிறேன். ஏற்கனவே நாம் ஏராளமான மைல்களுக்கு சுவரை எழுப்பி விட்டோம், சில இடங்களில் முடிந்துவிட்டது. ஆதலால், செலவின நிதிக்கும் ஒப்புதல் அளித்து ஜனநாயகக் கட்சியினர் ஷட் டவுனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், தான் அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றும் வகையில் புகைப்படத்தையும் ட்விட்டரில் ஜனாதிபதி டிரம்ப் பகிர்ந்துள்ளார். அதில், விரைவில் வடகொரியா ஜனாதிபதி கிம்முடன் நடைபெறவுள்ள சந்திப்புக்கு தயாராகி வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

Related posts

குண்டுவெடிப்பு தொடர்பான புலனாய்வுக் கடிதம் தொடர்பில் அநுர அம்பலம்

துமிந்தவின் விடுதலையும் வலுக்கும் சர்வதேச எதிர்ப்புகளும் [VIDEO]

ஆறு மாதத்தினுள் ஷவேந்திரா சில்வாவினால் இராணுவத்தில் 17,000 பேருக்கு பதவி உயர்வுகள்