சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலை – 6 மாவட்டங்களில் 74,000 மேற்பட்டோர் பாதிப்பு

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கண்டி புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 26 ஆயிரத்து 103 குடும்பங்களைச் சேர்ந்த 81 ஆயிரத்து 333 பேர் பாதிக்கப்பாட்டுள்ளனர்.

2 ஆயிரத்து 803 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 517 பேர் 30 இடைத் தங்கல் முகாம்களில் தங்கவைக்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு உள்ளடங்கலான பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 6 ஆயிரத்து 520 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 737 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஆயிரத்து 200 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 365 பேர் 13 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 15 ஆயிரத்து 167 குடும்பங்களைச் சேர்ந்த 47 ஆயிரத்து 414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில ஆயிரத்து 570 குடும்பங்களைச் சேர்ந்து ஐயாயிரத்து 57 பேர் 15 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பட்டுள்ளனர் என்றும் அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மன்னார், நானாட்டான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கில் 132 குடும்பங்களைச் சேர்ந்து 455 வெள்ளத்தினால் பாதிக்கபட்டுள்ளனர் என்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் மருதன்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நான்காயிரத்து 257 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் இடைத்தங்கல் முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு அந்தந்த பிரதேச செயலகப் பிரிவுகளினால் சமைத்த உணவு வழங்கப்படுகிறது. சுகாதார சேவை மற்றும் ஏனைய வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதேசத்தில் தற்போது மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதால் வெள்ள நீர் வடிந்து வருகிறது. எனவே இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களில் அதிகளவானோர் நாளை தமது இருப்பிடங்களுக்கு திரும்ப முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

அநுராதபுரத்தில் 11 பாடசாலைகளுக்கு பூட்டு

விஜயகலாவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி மாதம் வரை ஒத்திவைப்பு

“சஹ்ரானின் வகுப்பில் கலந்துகொண்ட அப்துல்லாவுக்கு விளக்கமறியல்”