சூடான செய்திகள் 1

தொடரூந்து தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-தொடரூந்து தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ள 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் மாற்றம் இல்லை என தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடரூந்து சேவையின் தரங்களில் நிலவும் முரண்பாடுகள் மற்றும் வேதன உயர்வு உள்ளிட்ட சில கோரக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாக அந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

தொடரூந்து இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், தொடரூந்து நிலைய அதிபர்கள் உட்பட சில தொழிற்சங்கத்தினர் இணைந்து இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

Related posts

பல பிரதேசங்களில் மழையுடனான காலநிலை…

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நம்பிக்கையில்லை

கொழும்பு- நகர மண்டபம் உள்ளிட்ட வீதிகளில் கடும் வாகன நெரிசல்