சூடான செய்திகள் 1

பண்டிகைக் காலத்தில் விசேட பாதுகாப்பு திட்டங்கள்

(UTV|COLOMBO)-பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

விசேடமாக மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் பலத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்

இந்த விடயம் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்க்பபட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட குறிப்பிட்டார்.

கடந்த ஒன்பது நாட்களில் மது போதையில் வாகனம் செலுத்தி இரண்டாயிரத்து 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தில் தமதும் பயணிகளினதும் பாதுகாப்பை கருத்திற் கொண்டு செயற்படுமாறும் சாரதிகளிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

 

 

 

 

Related posts

சீரற்ற காலநிலையினால் 5 பேர் உயிரிழப்பு: 10,000 மேற்பட்டோர் பாதிப்பு…

தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான மகிழிச்சி செய்தி இதோ…