கேளிக்கை

ஆபாச காட்சியில் காஜல்

(UTV|INDIA)-கமலுடன் இந்தியன் 2ம் பாகத்தில் நடிக்க உள்ளார் காஜல் அகர்வால். இப்படத்துக்காக வர்ம கலை பயிற்சியும் பெற்று வருகிறார். முன்னதாக இப்படத்தில் நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல் பரவியது. புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன், அதிக நாள் கால்ஷீட் தர மாட்டேன் உள்பட சில நிபந்தனைகளை அவர் விதித்தார். அவை பட தரப்பில் ஏற்கப்படாததால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். அதன்பிறகே காஜல் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதற்கிடையே மற்றொரு படத்தில் ஆபாச காட்சியில் நடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் காஜல் அகர்வால்.

பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் காஜல் அகர்வால் தற்போது நடித்து வருகிறார். இது இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த குயின் படத்தின் ரீமேக். பாரிஸ் பாரிஸ் படத்தின் டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. காஜல் அகர்வாலும் தனது டிவிட்டர் பக்கத்தில் டீஸரை வெளியிட்டிருக்கிறார். சில நொடிகள் ஓடும் இக்காட்சியில் அதிர்ச்சி தரும் காட்சி ஒன்றில் காஜல் நடித்திருக்கிறார். காஜலின் அருகில் நின்று பேசிக்கொண்டிருக்கும் பாருல் யாதவ் திடீரென்று அவரிடம் அத்துமீறி நடக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

மேலும் மற்றொரு காட்சியில் பாருலிடம் செக்ஸ் பற்றி காஜல் பேசும் வசனமும் இடம்பெற்றுள்ளது. இது இணையதளத்தில் வைரலாகியுள்ளது. இந்த காட்சிகளை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலர் காஜலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காஜலைப் போலவே தமன்னா, மஞ்சிமா மோகன் ஆகியோரும் இப்படத்தின் தெலுங்கு, மலையாள ரீமேக்கில் நடித்திருக்கின்றனர். அந்த டீஸரில் இதுபோன்ற காட்சிகள் இடம்பெறவில்லை.

 

 

 

 

Related posts

அருண் விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சந்தானம்

மிரட்டலாய் வந்த The Nun!- (VIDEO)

அக்‌ஷரா ஹாசனின் தனிப்பட்ட புகைப்படங்கள் லீக்