சூடான செய்திகள் 1

பஸ் பயணக்கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் குறையும் வாய்ப்பு

(UTV|COLOMBO)-பஸ் பயணக்கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு மாதங்களில் பாரிய அளவில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ளது.

இந்தநிலையில் எரிபொருள் விலைக்குறைப்புக்கு ஏற்ப பஸ் பயணக்கட்டணங்களின் அளவையும் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் இன்றைய தினம் நிதி அமைச்சர் மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளுடன் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதன், அடிப்படையில் இன்று மாலை பஸ் கட்டணங்கள் குறித்த அறிவிப்பு வெளியாக்கப்படும் என்று, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாடு கொழும்பில் ஆரம்பம்

ஐ.தே.க யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது

ஹரீன், மனுசவிற்கான மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு!