சூடான செய்திகள் 1

ராஜித சேனாரத்னவுக்கு GMOA கடும் எதிர்ப்பு

(UTV|COLOMBO)-ராஜித சேனாரத்னவை மீண்டும் சுகாதார அமைச்சராக நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இதற்கெதிராக எடுக்க வேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் ஆராய, நிறைவேற்று சபையை கூட்டவுள்ளதாக அறிவித்துள்ளது.

நிறைவேற்று சபை கூட்டத்தையடுத்து, செயற்குழு கூட்டத்தையும் கூட்டவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுக்கே தெரிவித்தார்.

ராஜித சேனாரத்ன அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாக அவருக்கு மீணடும் அமைச்சுப் பதவியை வழங்க வேண்டாம் எனக் கோரி, 14,000 க்கும் அதிகமான வைத்தியர்கள் கையொப்பமிட்ட மனுவொன்றை ஜனாதிபதியிடம் கையளிக்க எதிர்பார்த்திருந்ததாகவும், இவ்வாறான நிலையில் அவருக்கு மீண்டும் சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

அரச ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்!

 நான் மீண்டும் பிரதமராவேன் – மஹிந்த

விசேட கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று