கிசு கிசு

கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி!

(UTV|AMERICA)-முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சிறார்களுக்கான மருத்துவமனை ஒன்றில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபமா கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்துக் கொண்டு அங்கிருந்த குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

மேலும், குழந்தைகளுக்கு இனிப்பு, ஆடை வழங்கி அவர்களுடன் நடனம் மற்றும் பாட்டு பாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதுகுறித்து ஒபாமா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த மருத்துவம்னை ஊழியர்கள் என அனைவருக்கும் மிக்க நன்றி. அற்புதமான குழந்தைகள் மற்றும் அவர்கள் குடும்பத்துடன் பேச நேரம் கிடைத்தது.

இரண்டு குழந்தைகளின் தந்தையாக இருக்கும் பட்சத்தில் இங்கு இருக்கும் சூழலை தன்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது” என்று கூறியுள்ளார். ஒபாமாவின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

 

 

 

Related posts

அரச இணையத்தளங்களின் முடக்கம் : எது உண்மை?

கொரோனா தொடர்பில் வெளியான அறிய புகைப்படங்கள்

கோட்டாவை கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் முறைப்பாடு