சூடான செய்திகள் 1

இலங்கையின் அரசியல் மாற்றம்-ஜப்பான் வரவேற்பு

(UTV|COLOMBO)-இலங்கையில் சமீபத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களை ஜப்பான் வரவேற்றுள்ளது.

சட்டத்தின் பிரகாரம் உரிய முறைகள் ஊடாக புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமை உள்ளிட்ட அரசியல் ஸ்திரத்தன்மை நோக்கிய நடவடிக்கைகளை வரவேற்பதாக இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவித்துள்ளது. இலங்கையிலும், இந்து பசுபிக் பிராந்தியத்திலும் சமாதானத்தையும், ஸ்திரத்தன்மையையும், சுபீட்சத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை உடனான உறவுகளை வலுப்படுத்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் ஜப்பானிய அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ராஜேந்திரன் அப்துல்லாவிடம் வாக்குமூலம் பதிவுசெய்ய நீதிமன்றம் அனுமதி

” இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச் சலுகை இம்மாதம் 22ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் – அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

5 இராஜாங்க அமைச்சர்களை பதவி நீக்கிய ஜனாதிபதி ரணில்

editor