கேளிக்கை

பிரபாஸ் கெஸ்ட் ஹவுஸ் பறிமுதல்

(UTV|INDIA)-பாகுபலி ஹீரோ பிரபாஸ் தற்போது சாஹு படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். சமீபத்தில் இவரது கெஸ்ட் ஹவுஸை தெலங்கானா அரசு பறிமுதல் செய்துள்ளது. இதுபற்றி கூறப்படுவதாவது: தெலங்கானா ராயதுர்கம் பிராந்தியத்தில் நடிகர் பிரபாஸுக்கு சொந்த கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. இந்நிலையில் இதை அரசு அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட ஏக்கர் நிலம் மீது கோர்ட்டில் வழக்கு உள்ளது. அதற்கான விசாரணை கடந்த சில வருடங்களாக நடக்கிறது. 3 மாதத்துக்கு முன்பு இந்த நிலம் குறித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிலம் அரசுக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டது. இப்பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கும் பணி நடக்கிறது. இதேபகுதியில் பிரபாஸின் கெஸ்ட் அவுஸ் உள்ளதால் அதை அதிகாரிகள் கைப்பற்றினர். அப்போது பிரபாஸ் கெஸ்ட் ஹவுசில் இல்லை. இதையடுத்து அந்த கட்டிடத்தின் மீது இது அரசுக்கு சொந்தமான இடம் என்று அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றனர்.

 

 

 

 

Related posts

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் சர்ச்சைக்குரிய மகளிர் தின வாழ்த்து!

இருவருக்கும் இடையில் காதலா? (PHOTOS)

பிரபல நடிகை உயிரிழந்தார்