சூடான செய்திகள் 1

இரு வேறு பேருந்து சாரதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில்-தனியார் பேருந்து சாரதி பலி

(UTV|COLOMBO)-வெலிமடை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் அரச பேருந்து சாரதிக்கும், தனியார் பேருந்து சாரதிக்கும் இடையே நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியானார்.
சம்பவத்தில் தனியார் பேருந்தின் சாரதி பலியானதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெலிமடை – குருதலாவ பகுதியைச் சேரந்த 40 வயதுடைய தனியார் பேருந்து சாரதியே இந்த மோதலில் உயிரிழந்துள்ளார்.

நேற்றுப் பிற்பகல் பேருந்தின் பயண நேரம் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு, மோதல் நிலைமையாக மாறியதையடுத்தே இந்தக் கொலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அரச பேருந்தின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் அடங்களாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் காயமடைந்த இரண்டு பேர் காவற்துறையினரின் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

ராஜகிரிய பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

தேசிய வெசாக் நிகழ்வு எதிர்வரும் மே மாதம்

இன்று(11) முதல் மழையுடனான வானிலை