சூடான செய்திகள் 1

கொழும்பில் இருந்து யாழிற்கு ரயில் சேவை

(UTV|COLOMBO)-இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடைத் திட்டத்தின் கீழ் பரீட்சார்த்த சேவையின் கீழ் கொழும்பில் இருந்து நேற்று (19) யாழ்ப்பாணத்திற்காக புகையிரத சேவை ஆரம்பிபக்கப்பட்டது.

இச் சேவை பிற்பகல் 4 மணி அளவில் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் வந்தடைந்துள்ளது.

இச் சேவையானது எதிர்வரும் காலங்களில் 5 தர சேவையாக யாழ்ப்பாணத்திற்கும் கொழுப்புக்கான சேவையாக இருக்கும் என புகையிரத நிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மக்களுக்காக இலகுபடுத்தும் செயற்றிட்டத்திற்கு இணங்க இச் சேவை முன்னேடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது வரையில் ரயில் சேவையில் உத்தர தேவி, யாழ் தேவி, கடுகதி ரயில் மற்றும் இரவு நேர ரயில் சேவை என்பன ஈடுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் எஸ் – 13 புதிய ரயின் சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என கொழுப்பு புகையிரத சேவையின் கட்டுப்பாட்டு அதிகாரி எச்.ஆர். தர்ச ஆராட்சி தெரிவித்தார்.

 

 

Related posts

UTV பொதுத்தேர்தல் விசேட ஒளிபரப்பு

அரச துறைக்கு இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் பத்தாயிரம் பேர் இணைப்பு

மரண தண்டனை வழங்க பொருத்தமானவர்கள் இவர்களே…