சூடான செய்திகள் 1

நாட்டின் சில பிரதேசங்களில் பனிமூட்டமான நிலை

(UTV|COLOMBO)-டிசம்பர் 20 ஆம் திகதியில் இருந்து (குறிப்பாக 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில்) நாட்டில், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

 

 

 

 

 

 

Related posts

ரஷ்ய டாவோஸ் இல் பங்கேற்க இலங்கைக்கு மீண்டும் அழைப்பு!

முதலாவது தொற்றுக்குள்ளான நபர் பூரண குணம்

ஐசிசி உடன் கலந்துரையாடிய பின்னர் தேர்தல் நடத்தப்படும்