சூடான செய்திகள் 1

அழிக்கப்பட்ட குரல் பதிவுகளின் அறிக்கை இரகசியப் பொலிஸாரிடம்

(UTV|COLOMBO)-ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமாரவின் அலைபேசியிலிருந்து அழிக்கப்பட்ட குரல் பதிவுகள் தொடர்பான அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக இரகசியப் பொலிஸார் இன்று நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பான அலைபேசி பதிவுகள் சில நாமல் குமாரவின் அலைபேசியிலிருந்து அ​ழிக்கப்பட்டி​ருந்தது.

இந்நிலையில், குறித்த அலைபேசியை தயாரித்த ஹொங்ஹொங்கிலுள்ள “ டேடா எக்ஸ்பர்ட்” நிறுவனத்தின் ஊடாக அழிக்கப்பட்ட பதிவுகள் மீளப்பெற்று அவை பென்டரைவ் மற்றும் 60 பக்கத்திலான அறிக்கைகளாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இன்று மாலைக்குள் குறித்த அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இரகசியப் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

ஈஸ்டர் தாக்குதல் நடந்து 04 ஆண்டுகள் – மௌன அஞ்சலி

நியோமால் ரங்கஜீவ மீண்டும் சேவையில் இணைப்பு

நாமல் குமார குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைப்பு