வகைப்படுத்தப்படாத

ஈஸ்டர் தீவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பசுபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ள குட்டித்தீவு ஈஸ்டர் தீவு. இந்த தீவில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.07 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதேபோல், நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்தும் தகவல் இல்லை.

சிலி நாட்டின் ஆளுகைக்குட்பட்ட ஈஸ்டர் தீவில், 2017 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 7750 மக்களே வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

තැපැල් සේවක වැඩ වර්ජනය අද 4.00ට අවසන්

US launches inquiry into French plan to tax tech giants

ஊரடங்கு தொடர்பிலான விசேட அறிவித்தல்