(UTV|COLOMBO)-புறா தீவை காலவரையறையின்றி தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள கடற் கொந்தளிப்பே இத் தீவை மூடுவதற்கு காரணமென, திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
சிலவேளைகளில் இந்த மாதம் முடிவடையும் வரை புறா தீவுக்கு செல்ல அனுமதி வழங்கப்படாதென குறித்த தீவுக்கான பொறுப்பாளர் பீ.டீ. சுனில் சாந்த தெரிவித்துள்ளார்.
எனவே கடற்கொந்தளிப்பு சாதாரண நிலைக்கு வரும் வரை தாம் வழங்கும் அறிவுரைகளைப் பின்பற்றுமாறு சுற்றுலா பிரயாணிகளிடம் சுனில் சாந்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.