கிசு கிசு

உரிமையாளர் குரலை மிமிக்ரி செய்து அமேசான் அலெக்ஸா மூலம் பழங்கள் ஆர்டர் செய்த கிளி

புளோரிடா மாகாணத்தின் டம்பா நகரில் ஒரு சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது. பொதுவாக கிளிகள் மிகவும் சாமர்த்தியமானவை, கற்றுக் கொடுத்தால் எதையும் செய்துவிடும் திறமை கொண்டவை. சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் கிளிகளில் உள்ளன. இவற்றுள் ஒரு வகை தான் ரொக்கோ கிளிகள். கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள்.கிளிகள் உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கண்டங்களிலும் காணப்படுகின்றன. பொதுவாக இவை மரப்பொந்துகளில் வாழும். கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும். ஆண் ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் மனிதர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதில் சிறப்பு வாய்ந்தவை.

இந்நிலையில் ரொக்கோ கிளிக்கு அசாதாரணமான பேச்சு திறன் காணப்படுகிறது. தனது உரிமையாளரின் பேச்சு மற்றும் குரலை நன்கு உள்வாங்கிய ரொக்கோ கிளி ஒன்று, அவருக்கே தெரியாமல் அவரது குரலை போலவே பேசி அமேசான் அலெக்ஸாகருவி மூலம் தனக்கு வேண்டிய பழங்கள், காய்கறிகளை ஆர்டர் செய்து அதிசயிக்க வைத்துள்ளது. அலெக்ஸா எக்கோ உபகரணம் மூலம் ரகசியமாக தனக்கு வேண்டியவற்றை இந்த ரொக்கோ வகை கிளி ரகசியமாக ஆர்டர் செய்துவந்துள்ளதை கிளியின் முதலாளியே சமீபத்தில்தான் கண்டுபிடித்து அதிசயித்துள்ளார்.

கிளியின் அட்டகாசம்:

இந்த குறிப்பிட்ட குறும்புதனத்தை செய்த விநோதக் கிளியின் அசாதாரண பேச்சு திறமை பல்வேறு வகையில் சிக்கல்களை தோற்றுவித்துள்ளது. இதற்கு முன்னர் இக்கிளி பெர்க்‌ஷயரில் உள்ள தேசிய விலங்கு நல அறக்கட்டளை சரணாலயத்தில் தான் இருந்துள்ளது. ஆனால் இதனுடைய அதீத மற்றும் குறும்புதனமான பேச்சு ஒருகட்டத்தில் போவோர் வருவோரையெல்லாம் கெட்ட வார்த்தைகளால் ஏசி அதில் மகிழ்ச்சி கண்டுள்ளது. சரணாலயத்தின் பணியாளர் எவ்வளவோ முயன்றும் அதன் கெட்ட வார்த்தைகளைத் தடுக்க முடியவில்லை. இதனால் பல சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த ரொக்கோ கிளியை சரணாலய ஊழியர் மரியான் விஷ்நெவ்ஸ்கி என்பவர் கிளியை தத்து எடுத்துக் கொண்டார்.

மரியான் விஷ்நெவ்ஸ்கி தத்தெடுத்த பின்னர் புதிய வீடு, உலகம் அதற்கு மேலும் குஷி ஏற்பட அமேசான் அலெக்ஸா துணையுடன் தனக்கு என்னென்ன பிடிக்குமோ அத்தனையையும் ஆர்டர் செய்துள்ளது. ஐஸ்கிரீம்கள், உலர்ந்த திராட்சைகள், பருப்பு வகைகள் என்று சரமாரியாக ஆர்டர் செய்துள்ளது. ஒருமுறை லைட் பல்ப், பட்டம் ஆகியவற்றையும் ஆர்டர் செய்ததாம் இந்த கிளி. அமேசான் கணக்கு வைத்திருக்கும் கிளியின் உரிமையாளர் மீபத்தில்தான் இதன் சேட்டைகளைக் கண்டுபிடித்துள்ளார்.

 

 

 

 

Related posts

ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 100ஐ அண்மித்தது

பிச்சைக்காரி வேசம் போட்ட தாய் – 16 வருடங்களின் பின்னர் மகனை கண்டுபிடித்தார்

மினுவங்கொட பிரதேசத்தில் அவசர நிலை பிரகடனம்