(UTV|COLOMBO)-கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பல நபர்களிடம் பண மோசடி செய்து வந்த பெண் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
நவகமுவ பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த 46 வயதுடைய கனகரத்ன செனிலா திலானி த சில்வா என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுக்கு எதிாக 51 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 26 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 350 கிராம் தங்க ஆபரணங்களும், 50,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் 72 கடவுச்சீட்டுக்கள், 50 வங்கிப் புத்தகங்கள் மற்றும் 50 ஏடிஎம் அட்டைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.