சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று(18) கூடுகிறது

(UTV|COLOMBO)-ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் இன்று(18) மதியம் 01.00 மணிக்கு பாராளுமன்றம் முதல் முறையாக கூடவுள்ளது.

இன்றைய தினம் (18) ஒத்திவைப்பு பிரேரணைக்கான விவாதம் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவானது இன்று(18) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவுள்ளதாக முன்னணி தெரிவித்துள்ளது.

இதனிடையே, பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஆகிய பதவிகள் தொடர்பில் சபாநாயகர் தலைமையில் இன்று மதியம் 12.00 மணிக்கு கூடவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த காலங்களில் மூடப்பட்டிருந்த பாராளுமன்ற மக்கள் பார்வைக் கூடம் மற்றும் சபாநாயகர் விசேட விருந்தினர் கூடம் ஆகியவை வரையறைக்கு உட்பட்ட முறையில் திறக்கப்பட உள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

கே.டி லால்காந்தவுக்கு விளக்கமறியல்…

பெயருக்காக பணியாற்றும் கட்சியல்ல மக்கள் காங்கிரஸ் – முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவிப்பு

ரயன் மீண்டும் விளக்கமறியலில்…