சூடான செய்திகள் 1

சீரற்ற கால நிலையினால் கடல் கொந்தளிப்பு

(UTV|COLOMBO)-வடகிழக்கு மாகாணங்களில் கரையோர பகுதிகளில் நிலவிவரும் சீரற்ற கால நிலையினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக கடல் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் கடல் நீர் புகுந்துள்ளது. மட்டக்களப்பு நாவலடி கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.

நேற்று மாலை மட்டக்களப்பு நாவலடி கிராமத்திற்குள் திடீரென கடல் நீர் உட்புகுந்துள்ளது.

மருதமுனைகடற்கரைப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடலரிப்பு இடம்பெற்றுவருவதுடன் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுவருகிறது. மக்பூலியாபுர நூலகப்பிரதேசமே அதிகமான அரிப்புக்புள்ளாகிவருவருகிறது. அப்பிரதேசங்களிச் தென்னை மரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கடற்கரை பிரதான வீதியின் அருகில் அலைகள் வருவதையும் காண முடிகிறது
முல்லைத்தீவு கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றது.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சில கிராமங்களில் கடல் நீர் புகுந்துள்ளது.

 

 

 

 

 

Related posts

விசா அனுமதிப்பத்திரமின்றி நாட்டில் இருந்த இருவர் கைது

தனது வெற்றிக்கு ஹகீம் ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிக்கிறேன் – சஜித்

கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிப்புச் சம்பவம் (IMAGES)