சூடான செய்திகள் 1

இரு வேறு இடங்களில் புகையிரதங்களில் மோதி இருவர் பலி

(UTV|COLOMBO)-பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லேல்ல பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

இன்று (17) அதிகாலை 2.05 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதியதிலேயே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளான்.

கதுருவெல, கல்லேல்ல பகுதியை சேர்ந்த மொஹமட் அஸ்மீர் என்ற 17 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இதேவேளை, அனுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (16) நள்ளிரவு 12 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காத்தான்குடி பகுதியை சேர்ந்த ஆதம் லெப்பே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

மட்டு பல்கலை: கட்டுப்பாடு தொழில்நுட்ப கல்லூரிக்கு – பாதுகாப்பு பேரவை

ரயன் வென்ருயன் மீண்டும் விளக்கமறியலில்

நிருவாக ஊழியர்களினால் லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டுள்ளது