(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள கிரிக்கட் சுற்றுத் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒருநாள் மற்றும் இருபதுக்கு தொடருக்கான அணித்தலைவராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், நிரோஷன் திக்வெல்ல உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கட் அணிக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் கூறியுள்ளது.
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாக உள்ளது.