சூடான செய்திகள் 1

UPDATE-மஹிந்தவின் மேன்முறையீட்டு மனு மீதான உச்ச நீதிமன்ற விசாரணை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-அமைச்சரவை மீதான இடைக்கால தடையை எதிர்த்து பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தொிவித்துள்ளார்.


மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை 05 நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரிக்குமாறு கோரிக்கை விடுத்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(14) நிராகரித்துள்ளது.

அதன்படி குறித்த மனு 03 நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் சட்டத்தரணியால் இந்த கோரிக்கை மனு உச்ச நிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

பேராதனை பல்கலைக்கழகம் 21ம் திகதி திறக்கப்படும்

இரு வேறு பேருந்து சாரதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில்-தனியார் பேருந்து சாரதி பலி

உடுவே தம்மாலோக தேரர் விடுதலை