சூடான செய்திகள் 1

ஓய்வு பெறும் நீதியரசர் ஈவா வணசுந்தர

(UTV|COLOMBO)-உச்ச நீதிமன்ற நீதிபதி ஈவா வணசுந்தர இன்று தனது சேவையில் இருந்து ஓய்வு பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று உச்ச நீதிமன்றத்தின் 502ம் இலக்க அறையில் ஈவா வணசுந்தர, புவனேக அலுவிகாரே மற்றும் விஜித் மலல்கொட ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் போது ஈவா வணசுந்தர தனது 40 ஆண்டு கால சேவையில் இருந்து ஓய்வு பெறுவதாக நீதியரசர் புவனேக அலுவிகாரே அறிவித்துள்ளார்.

இதன்போது நீதியரசர் ஈவா வணசுந்தரவின் சேவைக்கு நீதியரசர் புவனேக அலுவிகாரே பாராட்டுத் தெரிவித்ததுடன், ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஷ்வரனும் பாராட்டுக்களை தெரிவித்தார்.

 

 

 

 

 

Related posts

தொழிநுட்ப தொல்பொருள் நிலையமும் நூலகமும் ஜனாதிபதியினால் திறப்பு

32 மில்லியன் ரூபா தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

கோட்டபாய ராஜபக்ஷ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில்…