சூடான செய்திகள் 1

சாதாரண தரப் பரீட்சை எழுதிய பரீட்சாத்திகள் 05வரின் பெறுபேறுகளை இரத்து செய்ய நடவடிக்கை

(UTV|COLOMBO)-இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சாத்திகள் ஐவரின் பெறுபேறுகளை இரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பரீட்சாத்திகள் பரீட்சையின் போது பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளோர் எனவும் அதனாலேயே குறித்த திணைக்களம் குறித்த தீர்மானத்தினை எட்டியதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.

கடந்த சாதாரண தரப் பரீட்சையின் போது, மோசடி செய்யமை தொடர்பில் சில பரீட்சாத்திகள் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட 07 பேர் கைதாகியமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

பாராளுமன்றத் தேர்தல் திகதிக்கு எதிரான மனு நிராகரிப்பு

editor

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகின

பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மஹீல் பண்டார தெஹிதெனியவுக்கு பிணை