சூடான செய்திகள் 1

பற்றுச் சீட்டு இருந்தால் பயணிக்கு காப்புறுதி இழப்பீடு

(UTV|COLOMBO)-தனியார் பேரூந்துகளுக்கு உரிமை பத்திரம் மற்றும் வருவாய் உரிமைப் பத்திரம் இருந்து, அதில் பற்றுச் சீட்டுடன் பயணிக்கும் பயணி ஒருவர் விபத்துக்குள்ளாகினால் கட்டாயமாக காப்புறுதி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மேல் மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் துசித குலரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

பற்றுச் சீட்டு இல்லாது தனியார் பேரூந்துகளில் பயணிக்கும் பயணி விபத்துக்கு உள்ளாகினால் அது குறித்து பயணிக்கு காப்புறுதி இழப்பீடு வழங்க மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பயணிகளுக்கு பற்றுச் சீட்டு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, அவ்வாறு பற்றுச் சீட்டு வழங்காதவிடத்து அது தொடர்பில் 0115-559595 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறியத்தர முடியும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

நாலக சில்வாவிற்கு விசேட பாதுகாப்பு

‘இலங்கையின் சிறப்புத் தர உற்பத்திகளுக்கு பஹ்ரைனில் பெரு வரவேற்பு’ அமைச்சர் ரிஷாத்திடம் பஹ்ரைன் வர்த்தக தூதுக்குழுவினர் தெரிவிப்பு!

அரச, தனியார் துறை பணிகளை ஆரம்பிக்க தீர்மானம்