சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO)-நுவரவெவ நீர் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் திருத்தப் பணிகளின் காரணமாக, சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீ​ர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்​பு சபை தெரிவித்துள்ளது.

இன்றிரவு(13) 7 மணி முதல் 24 மணித்தியாலத்துக்கு நீர் விநியோகம் தடைப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அனுராதபுரம், விஜயபுர, யாழ் சந்தி, குருந்தன்குளம் மற்றும் ரம்பேவ ஆகிய பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளின் காரணமாக, நாளை மறுதினம் (15) நள்ளிரவு மேலும் சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 6 மணி வரை நீர் விநியோகம் தடைப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி மொரகஸ்முல்ல, ராஜகிரிய, எத்துல்கோட்டை, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான பிரதான வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோன வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்வு

இடியுடன் கூடிய மழை