(UTV|COLOMBO)-இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் முதற்தர கிரிக்கெட் வீரர் ஜோன் லெவிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக திலன் சமரவீர கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.