கேளிக்கை

சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதை பெற்ற விஜய்

(UTV|INDIA)-ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்´. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது.

விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்களும் பல்வேறு சாதனைகளை படைத்தது.

இந்த நிலையில், ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பரிந்துரை செய்யப்பட்டார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் சிறந்த சர்வதேச நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கான விருது விழா லண்டனில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் நேரில் கலந்துக் கொண்டு விருதை பெற்றிருக்கிறார். தற்போது இந்தப் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

 

Related posts

“பரமபதம் விளையாட்டு” முன்னோட்டம்

காதலரை மணந்தார் பாவனா

இந்திய சினிமாவில் சர்ச்சையாகும் ‘டேஞ்சரஸ்’