கேளிக்கை

ஹன்சிகாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு

(UTV|INDIA)-ஹன்சிகா தற்போது `மஹா´ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். யு.ஆர்.ஜமீல் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் ஒரு போஸ்டரில் சாமியார் தோற்றத்தில் புகைப்பிடிப்பது போன்று ஹன்சிகாவின் தோற்றம் இடம்பெற்றிருந்தது.

தற்போது இந்த போஸ்டருக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. காவி உடை அணிந்து புகைப்பிடிக்கும் நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருக்கிறது.

 

 

 

 

Related posts

உலகமே அறிந்த மியா கலீபாவுக்கும் சமையல் காரருக்கும் டும் டும் டும்….(PHOTOS)

இன்று மாலை ‘தளபதி 63’ படத்தின் அப்டேட்

மீண்டும் தள்ளிப்போகும் ரஜினியின் 2.0