சூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு விசாரணை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களை அந்த பதவியில் கடமையாற்ற விடாது விடுக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட விஷேட மேன்முறையீட்டு மனு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 16ம் திகதி ஒத்திவைக்க இன்று(12) உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

தங்களுடைய பதவியில் கடமையாற்ற விடாது மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தர அரசியலமைப்பிற்கு விரோதமானது எனவும்,இவ்வாறான ஒரு தீர்ப்பை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மனுவானது, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்கள் 17 பேரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் 122 உறுப்பினர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

“பணம் பெற்று கனடாவிற்கு ஆட்களை அனுப்பும் சாணக்கியன்”

பலாலியில் தரையிறங்கிய இந்திய விமானம்

களுத்துறை பிரதேசத்தின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு