(UTV|COLOMBO)-எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி, சாதாரண விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறு உரிய பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
பண்டிகைக் காலத்தின் போதான வாழ்க்கைச்செலவு தொடர்பில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.
சத்தையில் அநீதியான வகையில் விலையை அதிகரிப்பதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் விலைக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு, சந்தையில் பொருட்களின் விலை தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
பண்டிகைக் காலத்தில் சதொசவினூடாக சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கி, நுகர்வோருக்கு கூடிய ஒத்துழைப்பை வழங்குதல் மற்றும் சந்தையில் எண்ணெய் விலை குறைவடைவதால் ஏற்படும் அனுகூலத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.