(UTV|COLOMBO)-பாராளுமன்றில் அவநம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில், பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவிகளது அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றில் 122 பாராளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட கேள்விவிராந்து மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்த மனுவின் அடிப்படையில் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய விசாரணையின் போது மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்களும் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று மேல் நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன் ஒபேசேகர ஆகியோரால் விசாரிக்கப்படவுள்ளது.