வகைப்படுத்தப்படாத

அன்டார்டிகா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் பசுபிக் சமுத்திரத்தில் அன்டார்டிகா வடக்கில் அமைந்துள்ள சான்ட்விச் தீவிற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

முன்னதாக இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் அது 7.1 என, அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலநடுக்கத்தால் அர்ஜென்டினாவின் டியரா டெல் பியூகோ மற்றும் சிலி நாட்டின் பல பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது.

அங்கு பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக பூகம்பத்தின் மையப் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 250 கிலோமீட்டர் தொலைவுக்கு பாதிப்பு இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முழுவிவரம் இன்னும் வெளிவரவில்லை.

பூகம்பத்தின் மையப் பகுதிக்கு அருகாமையில் பிரிஸ்டல் தீவும், தெற்கு சான்ட்விச் தீவுகளும்தான் உள்ளன.

இங்கு பெரிய அளவில் கட்டடங்கள் இல்லை என்பதால், அதிக சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், சிலி நாட்டில் நிலநடுக்கம் வெகுவாக உணரப்பட்டுள்ளது.

அதேபோல அர்ஜென்டினாவின் டியரா டெல் பியூகோ நகரில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

பேஸ்புக் நிறுவனம் உள்நாட்டுச் செய்திகள் மீது கூடுதல் கவனம்

சட்டவிரோதமாக இலங்கை வந்துள்ள 3 பேர் கைது

වෛද්‍ය සාෆිට එරෙහිව කුරුණෑගල විරෝධතාවයක්