சூடான செய்திகள் 1

பேருவளை ஹெரோயின் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்…

(UTV|COLOMBO)-கடந்த தினம் பேருவளை – பலபிட்டு கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகை பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் , குறித்த கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் சீசெல்ஸ் மற்றும் பங்களாதேஸ் நாடுகளில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை கைது செய்வதற்காக தற்போதைய நிலையில் சர்வதேச காவற்துறை ஊடாக குறித்த நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்நாட்டில் விநியோகிப்பதற்காக கொண்டு வரப்பட்ட குறித்த ஹெரோயின் தொகையின் ஒருபகுதி வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

 

 

 

Related posts

நிவாட் கப்ராலின் வங்கி கணக்குகளை பரிசீலனை செய்ய நீதவான்அனுமதி

கொள்ளுபிட்டியில் வாகன நெரிசல்

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக்கு மூவரடங்கிய குழு நியமனம்