சூடான செய்திகள் 1

சிங்கப்பூர்-இலங்கை சுதந்திர உடன்படிக்கை குறித்த அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிப்பு

(UTV|COLOMBO)-இலங்கை – சிங்கபூர் சுதந்திர உடன்படிக்கை உரிய அனுமதியைப் பெற்று மேற்கொள்ளப்படவில்லை என்று தெரியவந்துள்ளதாக, அதுதொடர்பில் ஆய்வு செய்த நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுதந்திர உடன்படிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு நேற்று  தமது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது.

இந்த குழுவின் தலைவரான கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் டபிள்யு. லக்மஸ்மன் குறித்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இதில் குறித்த உடன்படிக்கை தொடர்பில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடம் உரிய அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

அஞ்சல் பணியாளர்களின் போராட்டம் தொடர்கிறது

சீனா மற்றும் சவூதி அரேபியாவுக்கான விமான சேவை இடைநிறுத்தம்

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு