சூடான செய்திகள் 1

நாளைய தினம் ரணிலை பிரதமராக்க பாராளுமன்றில் நம்பிக்கைப் பிரேரணை

(UTV|COLOMBO)-நாளையதினம் பாராளுமன்றில் , ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க ஆதரவு தெரிவித்து நம்பிக்கைப் பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.

இந்த யோசனை வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியினால், பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் நாளையதினம் குறித்த நம்பிக்கைப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

இந்த பிரேரணையை ஐக்கிய தேசிய கட்சியின் உபத்தலைவர் சஜீத் பிரேமதாஸ முன்வைப்பார்.

இந்த நம்பிக்கைப் பிரேரணைக்கு தாங்களும் ஆதரவளிக்கவிருப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியூதீன் தமது டுவிட்டர் கணக்கின் ஊடாக அறிவித்துள்ளார்.

 

 

 

Related posts

மேலும் இரண்டு பகுதிகள் முடக்கம்

கண்டியில் மூடப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் திறப்பு

பேரூந்து விபத்தில் 4 பேர் பலி – 19 பேர் காயம்