சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர்கள் மோதல்-காவற்துறை உயரதிகாரி பாரளுமன்றிற்கு அழைப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றில் கடந்த தினம் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் மேற்கொள்ளப்படும் காவற்துறை விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் விடயங்களை கேட்டறிவதற்காக குறித்த விசாரணைகளுக்கு பொறுப்பான காவற்துறை உயரதிகாரியை பாரளுமன்றிற்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பல் உள்ளக விசாரணையொன்றை மேற்கொள்ள பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் தலைமையில் குழுவொன்று சபாநாயகர் கருஜயசூரியவால் நியமிக்கப்பட்டது.

சமல் ராஜபக்ஸ , ரஞ்சித் மத்துமபண்டார , சந்திரசிறி கஜதீர , பிமல் ரத்நாயக்க மற்றும் மாவை சேனாதிராஜா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இந்த குழு நாளை மறுதினம் முதல் தடவையாக பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளது.

குறித்த குழுவின் முன்னிலையில் பிரசன்னமாகுமாறு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் காவற்துறை உயரதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 14,15 மற்றும் 16ம் திகதிகளில் பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கிடையில் மோதல் நிலை ஏற்பட்டிருந்த நிலையில் , இதன் போது  பாராளுமன்றில்;சுமார் இரண்டு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் ​சேதமடைந்திருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

 

 

 

 

Related posts

உயர் நீதிமன்றுக்கு STF பாதுகாப்பு

பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு கூறியதாக தெரிவிக்கப்படும் செய்தி பொய்யானது…

போதைப் பொருளில் இருந்து தலைமுறையினரை பாதுகாக்க வேலைத்திட்டம் வேண்டும்-முன்னாள் ஜனாதிபதி