கேளிக்கை

ரஜினிக்கு சரியான ஜோடி நானே…

(UTV|INDIA)-கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், சசிகுமார், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர் ஹெய்ன், மாளவிகா மேனன், ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிம்ரன் பேசியதாவது,
இது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. 15 வருடத்திற்கு முன்பே ரஜினி சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை தவறவிட்டுவிட்டேன். அதற்காக வருத்தப்பட்டேன். தற்போது எனது ஆசை நிறைவேறிவிட்டதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மீனா, குஷ்பு, சிம்ரன் மூன்று பேரில் ரஜினிக்கு யார் சரியான ஜோடி என்று கேட்டதற்கு, சிம்ரன் தான் என்றார்.

Related posts

ஐஸ்வர்யாராய் – அபிஷேக் பச்சன் இடையே மோதலா?

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வரும் அனுஷ்கா

ஹாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் அல்லு அர்ஜூன்