சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் இன்று(10) விசேட கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

இன்று காலை பத்து மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்கு முன்னர் பொதுஜன முன்னணியுடன் இணைந்து செயற்படும் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதன் பின்னர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள அவர்கள், உயர்நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அதன் பின்னர் தேர்தல் ஒன்று நடைபெறுமாயின் அது குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் பொதுஜன முன்னணிக்கு ஆதரவான கட்சிகளின் பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பெசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

 

 

 

 

 

Related posts

நாடுகடத்தப்படவுள்ள 8,000 வெளிநாட்டவர்கள்

அனைத்து பிரஜைகளுக்கும் புதிய அடையாள அட்டை விரைவில்

நாட்டின் ஒரு சில இடங்களில் மழை…